Category:
Created:
Updated:
'அறிக்கை அரசியலை' தனது உயிர் மூச்சாகக்கொண்டு செயற்படும் ஜனநாயக மக்கள் முன்னணிக்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸை விமர்சிக்காவிட்டால் அரசியல் பிழைப்பு இல்லைபோலும். அதனால் தான் சமூக வலைத்தளங்களிலும் காங்கிரசுக்கு எதிராக அக்கட்சியினர் விமர்சிக்க ஆரம்பித்துள்ளனர் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.