Category:
Created:
Updated:
பெரு நாட்டில் அயகுச்சோவா பகுதியில் இருந்து ஹூவான்சாயோ என்ற பகுதிக்கு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக பேருந்து விபத்தில் சிக்கியது. இந்தப் பேருந்தில் பயணம் செய்த பயணிகளில் 24 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
பலர் படுகாயமடைந்த நிலையில் அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த கோர விபத்து நடக்க காரணம் பெருவில் உள்ள பராமரிப்பு அற்ற சாலைகள்தான் என்று மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.