சினிமா செய்திகள்
தயாரிப்பாளர் சங்கத்துக்கு விஷால் சவால்
நடிகர் விஷாலை வைத்து தயாரிக்கும் புதிய திரைப்படங்களின் தயாரிப்பாளர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள், எங்களிடம் கலந்தாலோசித்து, அதன் பின்னர் பணிகளை து
யோகிபாபுவின் ‘போட்’ டிரைலர் ரிலீஸ் ஆனது
யோகி பாபு நடிப்பில் சிம்புதேவன் இயக்கத்தில் உருவான ‘போட்’ என்ற திரைப்படம் வரும் ஆகஸ்ட் 2ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்ற
பிரபல ஓடிடியில் வெளியானது யோகி பாபுவின் சட்னி சாம்பார் வெப் சீரிஸ்
அண்மை காலமாக தமிழில் ரிலீஸ் ஆகும் பெரும்பாலான படங்களில் யோகி பாபு இல்லாத படங்களே இல்லை என்கிற அளவிற்கு தன் இடத்தை யாரும் தட்டி பறிக்காத வகையில் தன் நட
நடிகர் முத்துக்காளையை பாராட்டிய பிரபல இயக்குநர்
கடந்த 1997ம் ஆண்டில் பிரபுவின் பொன்மனம் என்ற படம் மூலம் தமிழில் என்டரி ஆனவர் நடிகர் முத்துக்காளை. முன்னதாக ஸ்டண்ட் மாஸ்டராக இவர் படங்களில் பணியாற்றிய
வதந்திகளுக்கு பதிலடி கொடுத்த கீர்த்தி சுரேஷ்
நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'ரகு தாத்தா' திரைப்படம் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தின ரிலீஸாக வெளியாகிறது. இந்தி திணிப்பை பற்றிய பட
மலேசியாவில் பிறந்த நாளை கொண்டாடும் சீரியல் நடிகை
விஜய் டிவி சீரியலில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் அஷ்வினி. இவர் தற்போது பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றன.விஜய்
சுதந்திர தினத்துக்கு வெளியாகவுள்ள பேய் படம்
திகில் கதையாக கடந்த 2015ஆம் ஆண்டு அஜய் ஞானமுத்து இயக்கத்தில், டிமாண்டி காலனி படம் வெளிவந்தது. இதில் நடிகர் அருள்நிதி கதாநாயகனாக நடித்திருந்தார். விறுவ
'பிதா' படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டது
ஜூலை 26'ம் தேதி வெளியாகவுள்ள பிதா படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு மற்றும் போஸ்டர் வெளியீட்டு நிகழ்வில், 23' மணி நேரம், 23' நிமிடங்களில் எடுக்கப்பட்ட
'ராயன்' சிறப்புக் காட்சிக்கு அனுமதி
தனுஷ் நடித்த 'ராயன்' திரைப்படம் நாளை மறுநாள் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் இந்த படத்திற்கு சிறப்பு காட்ச
’கொட்டுக்காளி’ ரிலீஸ் தேதி அறிவிப்பு
சூரி நடித்த ’கொட்டுக்காளி’ என்ற திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சற்றுமுன்
சுந்தர் சி மற்றும் வடிவேலு நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது
சுந்தர் சி இயக்கம் மற்றும் நடிப்பில் சமீபத்தில் வெளியான அரண்மனை 4 படம் இந்த ஆண்டின் முதல் ப்ளாக்பஸ்டர் ஆகியுள்ளது. இந்த படம் 100 கோடி ரூபாய் அளவுக்கு
சுந்தர் சி இயக்கம் மற்றும் நடிப்பில் சமீபத்தில் வெளியான அரண்மனை 4 படம் இந்த ஆண்டின் முதல் ப்ளாக்பஸ்டர் ஆகியுள்ளது. இந்த படம் 100 கோடி ரூபாய் அளவுக்கு
Ads
 ·   ·  7800 news
  •  ·  5 friends
  • I

    9 followers

மர்ம தேசமாக விளங்கும் வடகொரியா

முடியாட்சியின் போது பெரும்பாலான மன்னர்களின் காலத்தில் மக்களின் நிலை எப்படி என்றால் ம்... என்றால் சிறைவாசம்; ஏன் என்றால் வனவாசம், கேட்பதற்கு நாதி கிடையாது. காலங்கள் உருண்டோட, விழிப்புணர்வு ஏற்பட்டு மக்கள் தங்கள் உரிமைகளுக்காக துணிந்து குரல் எழுப்ப தொடங்கியதால் உலகில் முடியாட்சிக்கு முடிவுரை எழுதப்பட்டு ஜனநாயகம் மலர்ந்தது. 

அடிமைப்பட்டுக்கிடந்த பல நாடுகள் இரண்டாம் உலகப்போருக்கு பின் விடுதலை பெற்றன. அதன்பிறகே அங்குள்ள மக்கள் சுதந்திர காற்றை சுவாசிக்க ஆரம்பித்தார்கள். என்றாலும் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவுக்கு இன்னும் ஒரு சில நாடுகளில் ஜனநாயகம் என்ற பெயரில் சர்வாதிகார ஆட்சியே நடைபெறுகிறது. அப்படிப்பட்ட ஒரு நாடுதான் வடகொரியா.

'கொரிய ஜனநாயக மக்கள் குடியரசு' என்று அழைக்கப்பட்டாலும் அங்கு மக்களுக்கான ஜனநாயக உரிமைகள் முழுமையாக கிடைக்கிறதா? அவர்கள் சுதந்திரமாக வாழ்கிறார்களா? என்றால் பெரும்பாலோனோரின் பதில் 'இல்லை' என்பதாகத்தான் இருக்கும். மூன்று தலைமுறைகளாக ஒரு குடும்பத்தின் சர்வாதிகார ஆட்சிதான் அங்கு நடைபெற்று வருகிறது. 

வடகொரியாவில் அப்படி என்னதான் நடக்கிறது? கிழக்காசிய நாடான வடகொரியா, கொரிய தீபகற்பத்தின் வட பகுதியில் அமைந்துள்ளது. இந்த நாட்டின் தெற்கே தென்கொரியாவும், வடக்கே சீனா மற்றும் ரஷியாவும், மேற்கே மஞ்சள் கடலும், கிழக்கே ஜப்பான் கடலும் எல்லைகளாக உள்ளன. 9 மாகாணங்களையும், 3 சிறப்பு மண்டலங்களையும் கொண்ட வடகொரியாவின் தலைநகராக பியாங்யாங் விளங்குகிறது. 

1 லட்சத்து 20 ஆயிரத்து 540 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட வடகொரியா தமிழ்நாட்டை (1 லட்சத்து 38 ஆயிரம் ச.கி.மீ.) விடவும் சிறிய தேசம். 2 கோடியே 60 லட்சம் மக்கள்தான் வசிக்கிறார்கள். ஒட்டுமொத்த கொரிய தீபகற்பமும் 1910-ம் ஆண்டு முதல் ஜப்பான் பேரரசின் கட்டுப்பாட்டில் இருந்து வந்தது. இரண்டாம் உலகப்போரில் ஜப்பான் தோற்று அமெரிக்காவிடம் சரண் அடைந்ததை தொடர்ந்து, அங்கு ஜப்பானியர்களின் ஆட்சி முடிவுக்கு வந்தது. 

1948-ல் கொரிய தீபகற்பம் தென்கொரியா, வடகொரியா என இரு நாடுகளாக பிரிக்கப்பட்டது. இதனால் ஒன்றாக வாழ்ந்த ஏராளமான குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் பிரிய நேரிட்டதால் ஒருவரையொருவர் சந்திக்க முடியாத பரிதாப நிலை ஏற்பட்டது. பிரிவினைக்கு பிறகு இரு நாடுகளும் கீரியும் பாம்புமாக இருந்து வருகின்றன. 

இரண்டு கொரியாக்களுமே தங்கள் சொந்த அரசாங்கங்களின் கீழ் கொரியாவை ஒன்றாக இணைக்க முயன்றன. அத்துடன் எல்லை தகராறும் ஏற்பட்டதால் 1950-ம் ஆண்டு இரு நாடுகளுக்கும் இடையே போர் ஏற்பட்டது. இதில் வட கொரியாவுக்கு ரஷியாவும், சீனாவும் ஆதரவு அளிக்க, தென் கொரியாவுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் அதன் நட்பு நாடுகள் உதவிக்கு வந்தன. 

போர் தீவிரம் அடைந்ததால் இரு தரப்பிலும் பெரும் இழப்பு ஏற்பட்டது. ஏராளமான ராணுவத்தினர் மட்டுமின்றி 20 லட்சம் அப்பாவி மக்களும் பலி ஆனார்கள். இதனால் 1953-ம் ஆண்டில் இரு தரப்புக்கும் இடையே போர்நிறுத்த சமாதான ஒப்பந்தம் கையெழுத்தானது. மழை ஓய்ந்தாலும் தூறல் விடவில்லை என்பது போல் போர் முடிந்தாலும் இரு நாடுகளுக்கும் இடையே, முட்டலும் மோதலும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. 

பிரிவினையால் பாதிக்கப்பட்ட மக்கள் ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டுக்கு சென்று தங்கள் உறவினர்களை சந்திக்க முடியாத நிலை உள்ளது. கம்யூனிச ஆட்சி நடைபெறும் வடகொரியா ஓர் இரும்புத்திரை நாடாகவே விளங்குகிறது. சர்வாதிகார ஆட்சி நடைபெறுவதால் ஆட்சியாளர்களின் குடும்பத்தை பற்றிய தகவல்கள் பெரும்பாலும் ரகசியமாகவே வைக்கப்பட்டு உள்ளன. தற்போதைய அதிபர் கிம் ஜாங் அன்னின் தாத்தா கிம் இல் சங் வடகொரியாவின் நிறுவனர் என்று போற்றப்படுகிறார். 

1948-ம் ஆண்டு முதல் அதிபராக இருந்து வந்த கிம் இல் சங் 1994-ல் மரணம் அடைந்ததை தொடர்ந்து, அவரது மகன் கிம் ஜாங் இல் ஆட்சி அதிகாரத்துக்கு வந்தார். சர்வாதிகாரியான கிம் ஜாங் இல்-கோ யோங் குல் தம்பதிக்கு 1982-ம் ஆண்டு ஜனவரி 8-ந்தேதி பிறந்தவர்தான் தற்போதைய அதிபர் கிம் ஜாங் அன். இவர் சிறுவயதில் சுவிட்சர்லாந்து நாட்டில் கோனிஸ் நகரில் உள்ள ஒரு பள்ளியில் படித்தார். 

அப்போது இவர் வடகொரிய அதிபர் குடும்பத்து பிள்ளை என்று அங்குள்ளவர்களுக்கு தெரியாது. இவருக்கு ஒரு அண்ணன் மற்றும் ஒரு தங்கை உண்டு. கிம் ஜாங் அன் 2009-ம் ஆண்டில் ரி சோல் ஜூ என்ற பெண்ணை மணந்தார். இவர் ஒரு பாடகி என்று கூறப்படுகிறது. இந்த தம்பதிக்கு 3 பிள்ளைகள் உள்ளனர். 

2011-ம் ஆண்டு தனது தந்தை கிம் ஜாங் இல் இறந்ததை தொடர்ந்து, கிம் ஜாங் அன் புதிய அதிபராக பதவி ஏற்றார். இவரே ஆளும் கொரிய தொழிலாளர் கட்சியின் பொதுச் செயலாளராகவும் இருந்து வருகிறார். 687 உறுப்பினர்களை கொண்ட நாடாளுமன்றம் இருந்த போதிலும் ராணுவம், நிதி, பொருளாதாரம், வெளியுறவு உள்ளிட்ட அனைத்து அதிகாரங்களும் அதிபர் கிம் ஜாங் அன் கையிலேயே இருக்கிறது. 

அங்கு அவர் வைத்ததுதான் சட்டம். அவரை மீறியோ, அவரது விருப்பத்துக்கு மாறாகவோ எதுவும் நடந்துவிடாது. அப்படி யாராவது நடக்க முயன்றால், அவர்களின் கதி அதோ கதிதான்!.. ''கிம் ஜாங் அன் குடும்பத்தினர் இல்லை என்றால் வட கொரியா என்ற ஒரு நாடே கிடையாது. அவர்களால்தான் வாழ்கிறோம். அவர்களை விட்டால் நமக்கு வேறு கதிஇல்லை'' என்ற எண்ணம் ஆண்டாண்டு காலமாக அந்த நாட்டு மக்கள் மனதில் கொஞ்சம் கொஞ்சமாக திணிக்கப்பட்டு உள்ளது. 

இப்போதும் அது தொடர்கிறது. ''நீங்கள் இல்லாமல் எங்கள் தாய் நாடு இல்லை'' என்ற பாடலை வட கொரிய ராணுவத்தினர் தினமும் பாடுகிறார்கள். பள்ளிகளிலும் இந்த பாடல்தான் பாடப்படுகிறது. பள்ளிக்கூடங்கள், அரசு கட்டிடங்கள் என எங்கு பார்த்தாலும் கிம் ஜாங் அன், அவரது தாத்தா கிம் இல் சங், தந்தை கிம் ஜாங் இல் ஆகியோரின் படங்கள்தான் இருக்கும். தலைநகர் பியாங்யாங்கிலும், மற்ற நகரங்களிலும் கிம் ஜாங் அன்னின் தாத்தா மற்றும் தந்தையின் சிலைகள்தான் உள்ளன. 

மக்கள் தங்கள் வீடுகளில் இவர்களுடைய படங்களை வைத்திருக்க வேண்டும். இவர்களுடைய படங்களை அவமதிப்பது, மிகப்பெரிய குற்றமாக கருதப்பட்டு கடும் தண்டனை வழங்கப்படும். ஆட்சியாளர்களின் புகழ்பாடுவதே பெருமை என்ற நிலைக்கு மக்கள் ஆளாக்கப்பட்டு இருக்கிறார்கள். வடகொரிய மக்களுக்கு கருத்து சுதந்திரம் மற்றும் அரசியல், பொருளாதார சுதந்திரம் கிடையாது. சொந்த நாட்டிலேயே எல்லா இடங்களுக்கும் விருப்பம் போல் செல்ல முடியாது. 

அரசின் அனுமதி இல்லாமல் நாட்டை விட்டு வெளியேறுவது சட்ட விரோதமாகும். அப்படி தப்பிச்செல்ல முயற்சிப்பவர்கள் பிடிபட்டால், அவர்களுடைய வாழ்க்கை கிட்டத்தட்ட முடிந்த மாதிரிதான். ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, அதற்காக பிரத்யேக சிறைகளில் அடைக்கப்பட்டு துன்புறுத்தப்படுவார்கள். அங்கு கடுமையான வேலைகளை செய்ய வேண்டும். போதிய உணவும் வழங்கப்படாது. அவர்களுடைய குடும்பமும் தண்டனைக்கு உள்ளாகும். வடகொரியர்கள் வெளிநாடு செல்ல கடும் கட்டுப்பாடுகள் உள்ளன. தூதரக பணி, படிப்பு மற்றும் சில முக்கிய வேலைகளுக்காக வெளிநாடுகளுக்கு செல்கிறார்கள். இதேபோல் அந்த நாட்டு விளையாட்டு வீரர்கள் போட்டிகளில் கலந்து கொள்ள வெளிநாடுகளுக்கு செல்கிறார்கள். என்றாலும் அவர்கள் அங்கு ரகசியமாக கண்காணிக்கப்படுவார்கள். 

நாடு திரும்பிய பிறகும் அவர்கள் யார்-யாரை சந்தித்தார்கள்? என்னென்ன பேசினார்கள்? என்பது பற்றி விசாரிக்கப்படும். இதனால் வெளிநாடுகளுக்கு செல்பவர்கள் மிகவும் அபூர்வமாகத்தான் மற்றவர்களுடன் பேசுவார்கள். இதேபோல் தனிப்பட்ட முறையில் வெளிநாட்டினர் யாரும் வட கொரியாவுக்கு சுற்றுலா செல்ல முடியாது. குழுவாகத்தான் அங்கு செல்ல முடியும். 

அதுவும் அந்த நாட்டு அதிகாரிகள் ஏற்பாடு செய்யும் குழுவினர், அல்லது வட கொரிய அரசால் அங்கீகரிக்கப்பட்ட சுற்றுலா ஏஜென்சிகள் அழைத்துச் செல்லும் குழுவினர் மட்டுமே அந்த நாட்டுக்குள் நுழைய முடியும். அங்கு சுற்றுலா செல்லும் போது, அந்த நாட்டின் வழிகாட்டி எப்போதும் கூடவே வருவார். வழிகாட்டி இல்லாமல் எங்கும் செல்ல முடியாது. உள்நாட்டு ரகசியம் கசிந்துவிடும் என்று கருதுவதால் தங்கள் மக்களுடன் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பேசுவதை வட கொரிய அரசு விரும்புவது இல்லை. 

ஒருவேளை சுற்றுலா பயணிகள் பேச நேர்ந்தாலும் யாருடன் பேசுகிறோம்? என்ன பேசுகிறோம்? என்பதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அந்த நாட்டை பற்றியோ, அந்நாட்டின் தலைவர்களை பற்றியோ ஏதாவது மரியாதை குறைவாக பேசிவிட்டால் பெரும் சிக்கலில் மாட்டிக்கொள்ள நேரிடும். இந்தியர்கள் பாஸ்போர்ட் வைத்திருந்தால் 'விசா' பெற்று அங்கு சுற்றுலாவாகவோ, குடும்பத்தினர் மற்றும் நண்பர்களை பார்க்கவோ அல்லது வர்த்தக விஷயமாகவோ செல்ல முடியும். 

வேலைவாய்ப்பு தேடி அங்கு செல்ல அனுமதி கிடையாது. வடகொரியா பெண்களுக்கு பாதுகாப்பான நாடு அல்ல. அங்கு பெண்கள் அதிகாரிகளால் காவலில் வைக்கப்படுவதும், மனிதாபிமானமற்ற முறையில் துன்புறுத்தப்படுவதும், சரியாக உணவு வழங்காமல் கட்டாயப்படுத்தி வேலைவாங்கப்படுவதும், பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாவதும் நடப்பதாக மனித உரிமை அமைப்புகள் குற்றம்சாட்டுகின்றன. 

வடகொரிய அரசு நாத்திக அரசாக விளங்குவதால் மதத்தை ஊக்குவிப்பது இல்லை. என்றாலும் மதச் சடங்குகளை செய்யும் உரிமை மக்களுக்கு உள்ளது. வடகொரியாவில் வெறும் 30 ஆயிரம் கார்களே உள்ளன. குறைந்த எண்ணிக்கையிலான மக்களே கார்களை பயன்படுத்துகிறார்கள். அரசாங்கம் நடத்தும் வானொலி மற்றும் தொலைக்காட்சி செய்திகளைத்தான் வட கொரிய மக்கள் 'விதியே' என்று கேட்கவும், பார்க்கவும் முடியும். 

வடகொரியாவில் செல்போன் பயன்படுத்துவதற்கு நிறைய கட்டுப்பாடுகளை அந்த நாட்டு அரசு விதித்திருக்கிறது. அரசாங்கம் விரும்பாத எந்த தகவலையும் செல்போன் மூலம் மக்கள் பார்க்க முடியாது. அங்குள்ள போன்களில் இருந்து வெளிநாடுகளுக்கு பேச முடியாது. சர்வதேச அழைப்புகளுக்கான செல்போன் சிக்னல்கள் முடக்கப்பட்டு உள்ளன. 2017-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வின்படி, வடகொரியாவில் 69 சதவீத வீடுகளில்தான் செல்போனை பயன்படுத்துவதாக தெரியவந்துள்ளது. 

வடகொரிய மக்களுக்கு இணையதள வசதி கிடையாது. அந்த நாட்டில் வெறும் 0.5 சதவீத மக்கள் மட்டுமே இணையதளத்தை பயன்படுத்துகிறார்கள். அங்கிருக்கும் வெளிநாட்டினர் மற்றும் சுற்றுலா பயணிகள் மட்டுமே இணையதள சேவையை பயன்படுத்த முடியும். வெளிநாட்டுக்கு மின்னஞ்சல் அனுப்ப வேண்டும் என்றால் அதற்கான மையங்களுக்கு சென்றுதான் அனுப்ப வேண்டும். அனுப்பும் தகவலை அங்குள்ள அதிகாரி படித்துப்பார்த்த பின்புதான் அனுப்பி வைப்பார். 

2008-ம் ஆண்டு அங்கிருந்து தப்பிய இல்லியோங் ஜூ என்ற இளைஞர் கூறுகையில்; எங்கள் வீட்டில் அப்பா ஒரு சிறிய ரேடியோ வைத்திருந்தார். பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் யாருக்கும் கேட்டுவிடாதபடி அதில் நாங்கள் தென் கொரிய வானொலி நிகழ்ச்சிகளை கேட்போம். வெளிநாட்டு வானொலி நிகழ்ச்சிகளை கேட்பது குற்றம் என்பதால், நாங்கள் பிடிபட்டிருந்தால் சிறையில் அடைத்து கடுமையாக தண்டிக்கப்பட்டிருப்போம் என்றார். 

ரஷிய அதிபர் புதின், கிம் ஜாங் அன்னின் நெருங்கிய நண்பர். உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷியாவுக்கு கிம் ஜாங் அன் முழு ஆதரவு அளிக்கிறார். தென்கிழக்கு ஆசிய நாடுகளான வியட்நாம், லாவோஸ், கம்போடியா, இந்தோனேசியாவுடனும் நெருக்கமான உறவு வைத்திருக்கிறது.   

தென்கொரியாவுக்கு பக்கபலமாக இருப்பதால் அமெரிக்காவை முக்கிய எதிரியாக கருதுகிறது வடகொரியா. 2018-ம் ஆண்டு ஜூன் 12-ந்தேதி சிங்கப்பூரில் அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன்னும் சந்தித்து பேசினார்கள். இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பாக கருதப்பட்டது.       

வடகொரியாவுக்கு செல்வது சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொள்வதற்கு சமம் என்பதால், பெரும்பாலும் அங்கு யாரும் செல்ல விரும்புவது இல்லை. அனுமதியும் அவ்வளவு எளிதில் கிடைக்காது. அப்படியே சென்றாலும் ஏராளமான கட்டுப்பாடுகளை பின்பற்றவேண்டும். அங்கு சுதந்திரமாக எங்கும் செல்லவோ, யாருடனும் பேசவோ முடியாது. 

  • 266
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads