சினிமா செய்திகள்
பழம்பெரும் நடிகை சிஐடி சகுந்தலா காலமானார்
பழம்பெரும் நடிகை சிஐடி சகுந்தலா காலமானார். அவருக்கு வயது 84.தமிழ் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழிகளில் நடிகையாக திகழ்ந்தவர் ஏ.சகுந்தலா. 19
சிறுவயதில் மிகவும் அழகாக இருக்கும் இந்த நாயகி யார் தெரிகிறதா?
யார் என்று தெரிகிறதா?நீங்கள் கண்டுபிடிக்க சில வரிகள்...சினிமாவில் ஒரு விஷயம் ஹிட்டாகி விட்டால் அது அப்படியே தொடர்ந்து டிரண்டாகும்.அப்படி தான் பிரபலங்க
ரஜினியின் 'கூலி' சண்டை காட்சி லீக் ஆனது
கூலி படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட சண்டை காட்சி தற்போது லீக் ஆகி இருக்கிறது. நாகர்ஜுனா சுத்தியால் ஒருவரை அடிப்பது போல அந்த காட்சி இருக்கிற
GOAT படத்தின் 13 நாள் வசூல் - அதிகாரபூர்வ அறிவிப்பு
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்த GOAT படம் கடந்த செப்டம்பர் 5ம் தேதி ரிலீஸ் ஆனது. படத்தை ரசிகர்கள் மட்டுமின்றி குடும்ப ரசிகர்களும் கொண்டாடி வருக
நடிகை கீர்த்தி சுரேஷின் வைரலாகி வரும் அழகிய புகைப்படம்
கீர்த்தி சுரேஷ் மலையாள முன்னணி தயாரிப்பாளரான சுரேஷின் மகள். இவர் குழந்தை நட்சத்திரமாக மலையாள சினிமாவில் பல படங்களில் நடித்துள்ளனர். வளர்ந்த பின்னர் கத
சர்வர் சுந்தரம்
ஒரு எளிமையான மனிதனின் வாழ்க்கை சம்பவங்களை சோகமாகவும் அதே சமயம் காமெடியாகவும் இருக்க வேண்டும் என்பதை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட நாடகம் தான் சர்வர் ச
அற்புதமான நகைச்சுவை நடிகர் நாகேஷ்
நாகேஷ் -நகைச்சுவையில் விசுவரூபம் எடுத்தவர்.வாலி- கவிதையில் கரை கண்டவர்.வறுமையின் கோரப்பிடியில் சிக்கி வாலியும், நாகேஷும் தொடக்க நாட்களில் சாப்பாட்டுக்
நடிகர் சங்கத்துக்கு நன்றி தெரிவித்த நடிகர் தனுஷ்
தென்னிந்திய மொழிகள் மட்டும் இல்லாமல் இப்போது பாலிவுட் வரை சென்று பிஸியான நடிகராக இருப்பவர் தனுஷ். அவர் நடிப்பில் இப்போது ஒன்றுக்கு மேற்பட்ட படங்கள் உர
நடிகை ஜெயகுமாரியின் சோகக்கதை
14 வயதில் சினிமா.. 20 வயதில் உச்சம்.. தலைகீழாக மாறிய வாழ்க்கை.. சிறையில் தண்டனை.. நடிகை ஜெயகுமாரியின் சோகக்கதை..!14 வயதில் சினிமாவில் அறிமுகமாகி 20 வய
ரத்தக்கண்ணீர் படத்தில் நடிக்க எம்.ஆர்.ராதா போட்ட கண்டிஷன்கள்
நடிகவேள் எம்.ஆர்.ராதா..! இவரை போல ஒரு துணிச்சல்காரரை இந்திய வரலாறு இதுவரை பார்த்ததில்லை.. இனியும் பார்க்க போவதில்லை.. "உங்களுக்கு பிடித்த இந்திய நடிக
எம்.ஜி.ஆர் புகழ் இன்றும் நிலைத்திருக்க காரணம்
MGR முதல்வர் ஆன பின் ஒரு நாள் கோட்டைக்கு புறப்படும் முன் மலை என குவிந்து இருந்த அவருக்கு வந்த கடிதங்களில் கிளி ஜோசியர் எடுப்பதை போல ஒரு கடிதத்தை எடுக்
பாடகர் மனோ பற்றிய சில தகவல்கள்
இவரது இயற்பெயர் நாகூர் பாபு. இவரது தாய்மொழி தெலுங்கு. பிறப்பால் இஸ்லாமியர். இவருக்கு மனோ என்ற பெயரைச் சூட்டியவர் இளையராசா. இவர் ஆந்திரப் பிரதேசத்திலுள
Ads
 ·   ·  7914 news
  •  ·  5 friends
  • I

    9 followers

உதவிக் கல்விப் பணிப்பாளர் செல்வநாயகி - நடராஜதுரை கல்விப் பணியில் இருந்து ஓய்வு பெறுகிறார்

பட்டிருப்பு கல்வி வலயத்தின் முறைசாராக் கல்விப் பிரிவில் கடமையாற்றிய உதவிக் கல்விப் பணிப்பாளர் செல்வநாயகி - நடராஜதுரை 35 வருட கல்விப் பணியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். தனது கல்விப் பணியில் மட்/பட்/குருமண்வெளி சிவசக்தி மகாவித்தியாலயம், மட்/பட்/எருவில் கண்ணகி மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில தனது பணியினை திறம்பட மேற்கொண்டு வந்தார். 

தொடர்ந்து பட்டிருப்பு வலயக் கல்வி அலுவலகத்தில் முறைசாராக் கல்விப் பிரிவிற்கான ஆசிரிய ஆலோசகராக 01.07.2004 இணைக்கப்பட்ட செல்வநாயகி - நடராஜதுரை அவர்கள் 21.11.2016 இல் முறைசாராக் கல்விப் பிரிவிற்கான உதவிக் கல்விப் பணிப்பாளராக பதவியுயர்வு பெற்று பட்டிருப்பு கல்வி வலயத்தின் முறைசாராக் கல்விப் பிரிவின் பணிகளை ஆற்றி வந்தார். இவர் இன்று 60 ஆவது வயதில் அரச சுற்றுநிருபத்திற்கு அமைவாக ஓய்வு பெறுகின்றார்.

செல்வநாயகி - நடராஜதுரை  அவர்கள் ஆரம்பக் கல்வியினை மட்/பட்/குருமண்வெளி சிவசக்தி மகா வித்தியாலயத்தில் ஆரம்பித்து இடைநிலை உயர்தரக் கல்வியினை மட்டக்களப்பின் பிரபலமான பாடசாலைகளில் ஒன்றான மட்/மட்/வின்சன்ட் உயர்தரப் பாடசாலையில் பயின்ற இவர் உயர்தரத்தில் சித்தி பெற்று இலங்கையின் தலைசிறந்த பல்கலைக் கழகமான பேராதனைப் பல்கலைக் கழகத்திற்குத் தெரிவு செய்யப்பட்டு கலைப்பட்டாதாரியாக தன்னை உயர்திக் கொண்டார். தொடர்ந்து பட்டமேற் கல்வி டிப்ளோமாப் பட்டத்தினையும் பெற்று கல்விப் பணியில் தடம்பதித்தார். தனது கல்விப் பணியில் மாணவர்களுக்கு இலகுவில் விளங்கக் கூடிய வகையில் தான் பயின்ற, கற்பித்த நுட்பங்களினைப் பயன்படுத்தி செயற்பாடு சார்ந்த சிறந்த கற்பித்தலை மேற்கொண்டு மாணவர்கள் மனங்களில் தனக்கென ஒரு இடத்தினைப் பெற்றுக் கொண்டார். க.பொ.த.சாதாரண தரம், க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கு மாணவர்களைத் தயார்படுத்தி வெற்றியும் கண்டதன் மூலம் பெற்றார்களினதும் நன்மதிப்பையும் தனதாக்கிக் கொண்டார். அதிபர், ஆசிரியர்களுடன் கடமைசார்ந்தும், அன்பு சார்ந்தும் பழகி தனித்துவமான மதிப்பினையும் பெற்றுக் கொண்டார். கற்றல் - கற்பித்தல் பணிசார்ந்து மாத்திரம் தனது பணியினை மட்டுப்படுத்தாது கலை கலாசாரம், விளையாட்டு, இலக்கிய அரங்கு போன்ற போட்டிகளுக்கு மாணவர்களைத் தயார்படுத்தி மாணவர்கள் அதில் வெற்றிபெறுவதற்காக உழைத்ததன் மூலம்  தனது பணியில் பல்வேறு அநுபவங்களை தன்னகத்தே கொண்டவராகவும் காணப்பட்டார். 

பட்டிருப்பு வலயக் கல்வி அலுவலகத்தில் கடமையாற்றிய வேளை முறைசாரா வேலைத்திட்டங்களை முன்னின்று செயற்படுத்தினார். சமூகம் சார்ந்த, மாணவர்கள் சார்ந்த விடயங்களில் விழிப்புணர்வுச் செயற்பாடுகள், வீதி நாடகங்கள், நடைப்பயணங்கள் போன்றவற்றை முன்னெடுத்துச் சமூகச் சீர்கேடுகளைக் களைய முன்னின்று உழைத்தார். பட்டிருப்பு கல்வி வலயத்தின் இடைவிலகல் மாணவர்களை பாடசாலைகளுக்கு வரவழைத்து கனிசமானளவு இடைவிலகளைக் குறைத்தது மாத்திரமன்றி பாடத்தெரிவு வழிகாட்டல் கருத்தரங்குகளை நடாத்தி மாணவர்களுக்கு சிறந்த வழிகாட்டலை மேற்கொண்டு தனது பணியில் ஓய்வு பெறுகின்றார்.


  • 135
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads