திரைப்படங்கள், மேடை நாடகங்கள், இசை நிகழ்ச்சிகளுக்கான உரிமக் கட்டணங்கள் அதிகரிப்பு
திரைப்படங்கள் (உள்ளூர் மற்றும் வெளிநாட்டு), மேடை நாடகங்கள், இசை நிகழ்ச்சிகள் போன்ற பொது கண்காட்சிகளுக்கான உரிமக் கட்டணம் வெகுஜன ஊடக அமைச்சினால் வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி மூலம் திருத்தப்பட்டுள்ளது.
அதன்படி வெளிநாட்டு திரைப்படங்களுக்கான உரிமக் கட்டணம் 20,000 ரூபாவிலிருந்து ரூ. 40,000 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் திரைப்படங்களுக்கான கட்டணம் 10,000 ரூபாவிலிருந்து ரூ. 15,000 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.
இசை மற்றும் நிகழ்ச்சிகளுக்கான உரிமக் கட்டணமும் பின்வருமாறு உயர்த்தப்பட்டுள்ளது
i) உள்ளூர் கலைஞர்களின் பங்கேற்புடன் திறந்தவெளி நிகழ்ச்சிகள் - ரூ. 3,750 ரூபா.
(ii) உள்ளூர் கலைஞர்களின் பங்கேற்புடன் ஒரு மண்டபத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகள் 3,000 ரூபா
(iii) வெளிநாட்டு கலைஞர்கள் பங்கேற்கும் திறந்தவெளி நிகழ்ச்சிகள் - ரூ. 37,500 ரூபா
(iv) வெளிநாட்டு கலைஞர்களின் பங்கேற்புடன் ஒரு மண்டபத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகள் - 22,500 ரூபா
(v) தொலைக்காட்சி சேவைகளால் நேரடியாக ஏற்பாடு செய்யப்பட்ட மேடை நிகழ்ச்சிகள் மற்றும் நிகழ்ச்சிகள் 37,500 ரூபா
இதேவேளை, நீண்ட கால மற்றும் குறுகிய கால மேடை நாடகங்களுக்கான உரிமக் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி 500 ரூபாவிலிருந்து 250 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.
முன்பள்ளி நிகழ்ச்சிகளுக்கான உரிமக் கட்டணமாக 2,000 ரூபா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.