பாராளுமன்ற உறுப்பினர்களை விமர்சிக்க அமைச்சருக்கு எந்தவித அருகதையும் இல்லை - வேலுசாமி ராதாகிருஸ்ணன்
அரசியல் வரலாற்றில் 32 வருடகால அனுபவத்தில் தற்போது உள்ள புதிய அமைச்சருக்கு எனது அனுபவம் கூட அவரின் வயதில்லை ஆகவே எங்களை விமர்சிக்க அந்த அமைச்சருக்கு எந்தவித அருகதையும் இல்லை என மலையக மக்கள் முன்னனியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்னியின் பிரதி தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுசாமி ராதாகிருஸ்ணன் தெரிவித்தார்.மலையகம் 200 என்ற நடைபவனியின் மக்கள் மத்தியில் கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனை தெரிவித்தார்.இதன் போது மேலும் கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் வேலுசாமி ராதாகிருஸ்ணன் - நாட்டின் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்திப்பதற்கு எமக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது இருந்த போதிலும் தமிழ் முற்போக்கு கூட்டணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நடைபவனியின் நிகழ்வு காரணமாக நாங்கள் ஜனாதிபதியை சந்திக்கவில்லை ஆனால் மலையகத்திலுள்ள சில அரசியல்வாதிகள் இதனை வைத்துக் கொண்டு எம்மை விமர்சித்து வருகிறார்கள்.தங்களுக்கு வயதாகி விட்டதாகவும் காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொள்வதாக எம்மை குற்றம் சுமத்துகின்ற அமைச்சர் ஒன்றை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும் அவருடைய தாத்தா 80 வயதில் இறந்திருந்தாலம் கூட மலையக மக்களுக்கு சிறந்த சேவையினையாற்றிய ஒரு தலைவர் முன்னால் ஜனாதிபதி ஜே.ஆர் ஜெயவர்த்தன 80 வயதில் ஜனாதிபதி பதவியினை வகித்தார் அதே போல் ரணில் விக்ரமசிங்க அவர்கள் 72 வயிதில் ஜனாதிபதியாக பதவியேற்றுள்ளார்.அவருக்கு வயது உள்ளது என வாய்க்கு வந்த வார்த்தைகளை பிரயோகிப்பது ஒரு மனிதத்தன்மை அல்ல ஆகவே தன்னுடைய அறுகதையை நினைத்துக் கொண்டு மற்றவர்களை விமர்சனம் செய்ய தெரிந்து கொள்ள வேண்டும்.எனவே எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவை ஜனாதிபதியாக நியமித்து மலையக மக்களுக்கு பாரிய சேவையினை முன்னெடுக்கவுள்ளோம் என தெரிவித்தார்.