Ads
ஜப்பான் நோக்கி புறப்பட்ட விமானம் மீண்டும் கட்டுநாயக்காவில் தரையிறக்கம்
ஜப்பான் நோக்கிப் புறப்பட்ட இலங்கை விமானமொன்று கணினி அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நேற்று புதன்கிழமை (28) இரவு மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவைக்கு சொந்தமான UL-455 என்ற இந்த விமானம் நேற்று (28) இரவு 8.20 மணிக்கு ஜப்பானுக்கு புறப்பட்டது.
குறித்த விமானத்தின் சக்கர அமைப்பைக் கணினி அமைப்பு குறிப்பிடத் தவறியதால் 2 மணிநேரம் 25 நிமிடங்கள் கழித்து, 10.45 மணியளவில் மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியது.
விமானத்தில் பயணிகள் மற்றும் பணியாளர்கள் உட்பட 301 பேர் இருந்துள்ளனர். பின்னர், பயணிகள் வேறொரு விமானத்தில் ஜப்பானுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக விமானநிலையத்தின் நடவடிக்கைகளிற்கு பொறுப்பான முகாமையாளர் தெரிவித்தார்.
Info
Ads
Latest News
Ads