Ads
களனிவெளி ரயில் சேவைகள் வழமைக்கு திரும்பியது
களனிவெளி மார்க்கத்தின் ரயில் சேவைகள் வழமைக்கு திரும்பியுள்ளது.
தற்போது குறித்த மார்க்கத்தில் ரயில்கள் வழமையாக இயங்குவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. நேற்று (27) பிற்பகல் கொழும்பு கோட்டையில் இருந்து கொஸ்கம நோக்கி பயணித்த ரயில் ஒன்று கொட்டா வீதி ரயில் நிலையத்திற்கு அருகில் தடம் புரண்டது.
இதன் காரணமாக ரயில் மார்க்கத்தில் சேதம் ஏற்பட்டதால் அந்த வழித்தடத்தில் இயக்கப்படவிருந்த அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டன.
ரயில் மாா்க்க திருத்தத்தின் பின்னர் களனிவெளி பாதையில் இயங்கும் ரயில் சேவைகள் இன்று (28) பிற்பகல் வழமைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
Info
Ads
Latest News
Ads