மறுசீரமைப்பு தொடர்பில் தெளிவுபடுத்துங்கள் - நாமல் ராஜபக்ஷ வலியுறுத்தல்
மறுசீரமைக்கும் நிறுவனங்கள் எவை? மறுசீரமைப்புக்கான காரணங்கள் என்ன? அந்த நிறுவனங்கள் இலாபமிட்டும் நிறுவனங்கள் என்றால் அதனை ஏன் மறுசீரமைப்பு செய்கிறீர்கள்? என்பது தொடர்பில் ஜனாதிபதி பாராளுமன்றத்தை போன்றே நாட்டு மக்களுக்கும், குறித்த நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கும் தெளிவுப்படுத்த வேண்டும் என பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
நீதிமன்றத்தில், வழக்கு விசாரணைகளுக்காக ஆஜராகியிருந்த சந்தர்ப்பத்தில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
விசேடமாக மறுசீரமைக்கும் நிறுவனங்கள் எவை? மறுசீரமைப்புக்கான காரணங்கள் என்ன? அந்த நிறுவனங்கள் இலாபமிட்டும் நிறுவனங்கள் என்றால் அதனை ஏன் மறுசீரமைப்பு செய்கிறீர்கள்? நட்டமடையும் நிறுவனங்கள் என்றால் என்ன நடைமுறை பின்பற்ற படுகிறது? அல்லது செயற்திறனை அதிகரிக்கவா அவை மறுசீரமைப்பு செய்யப்படுகிறது? என்பதை நாட்டு மக்களுக்கும், பாராளுமன்றத்துக்கும் தெளிவுப்படுத்த வேண்டும்.
மறுசீரமைப்பு இணங்கப்பட்ட விடயங்கள் தொடர்பில் வெளிக்கொணர வேண்டும். அதுமாத்திரமின்றி மறுசீரமைப்பு தொடர்பில் விதிக்கப்பட்ட நிபந்தனைகள் என்ன? இந்தரப்பினரின் தெரிவில் முன்னெடுக்கப்பட்ட தூய்மை மற்றும் வெளிப்படைத்தன்மை பற்றியும் அந்த நிறுவனங்களில் கடமையாற்றும் ஊழியர்களின் உரிமைகள் தொடர்பில் கூறுங்கள். பாராளுமன்றத்திலும், மக்களுக்கும் விசேடமாக அந்த நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கும் மறுசீரமைப்பு தொடர்பில் தெளிவுப்படுத்த வேண்டும் என்றார்.