Category:
Created:
Updated:
புத்தளம் நெடுங்குளம் வீதியின் குடியிருப்பு பகுதியில் சுமார் 50 இற்கும் அதிகமான காகங்கள் திடீரென உயிரிழந்து விழுந்துள்ளமை அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து, அப்பகுதி மக்கள் புத்தளம் பிரதேச மிருக வைத்திய உத்தியோகத்தர் மற்றும் அலுவலக அதிகாரிகளுக்கு இது தொடர்பில் தகவல் வழங்கியுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் உயிரிழந்த காகங்களை பார்வையிட்டுள்ளனர்.
குறித்த காகங்கள் உயிரிழந்தமைக்கான காரணத்தை கண்டறிவதற்காக உயிரிழந்த காகத்தின் மாதிரிகளை பகுப்பாய்விற்காக பேராதனை பல்கலைக்கழகத்திற்கு அனுப்புவதற்காக அதிகாரிகள் எடுத்துச் சென்றதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.