Category:
Created:
Updated:
அணுசக்தியை அமைதியான முறையில் பயன்படுத்துவதற்கான இலங்கையின் அர்ப்பணிப்பை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார். விரிவான அணு ஆயுத சோதனை தடை ஒப்பந்த அமைப்பின் நிறைவேற்று செயலாளர் ரொபர்ட் பிலாய்டுடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.