Ads
வர்த்தக வங்கிகளின் வட்டி வீதங்கள் குறைக்கப்படும் : ரஞ்சித் சியம்பலாபிட்டிய
வர்த்தக வங்கிகளின் வட்டி வீதங்கள் சுமார் 2.5% குறைக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இன்று அறிவித்துள்ளார். இலங்கை மத்திய வங்கி இன்று காலை கொள்கை விகிதங்களை தளர்த்தியதை அடுத்து இந்த குறைப்பு எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மத்திய வங்கி நிலையான வைப்பு வசதி வீதம் மற்றும் நிலையான கடன் வசதி வீதத்தை 250 அடிப்படை புள்ளிகளால் முறையே 13.00 மற்றும் 14.00 சதவீதமாகக் குறைத்தது.
பணவீக்கம் எதிர்பார்த்ததை விட வேகமாக குறைதல், பணவீக்க அழுத்தங்கள் படிப்படியாக குறைதல் மற்றும் பணவீக்க எதிர்பார்ப்புகளை மேலும் நங்கூரமிடுதல் ஆகியவற்றுக்கு ஏற்ப பண நிலைமைகளை தளர்த்தும் நோக்கில் மத்திய வங்கியின் நாணய சபை இந்த முடிவை எடுத்துள்ளது.
Info
Ads
Latest News
Ads