வேலையே செய்யாம இருக்கணும்; அதுக்கு ரூ.1.5 கோடி சம்பளம்
மெட்டா நிறுவனத்தின் முன்னாள் பெண் ஊழியரான மேடலின் மசாடோ என்பவர் டிக்டாக் வீடியோ ஒன்றில் வெளியிட்ட செய்தியில், வேலையில் எதுவும் செய்யாமல் ஓராண்டுக்கு ரூ.1.5 கோடி என்ற அளவில் தனக்கு சம்பளம் அளிக்கப்பட்டது என தெரிவித்து உள்ளார்.

அவரது கூற்றுப்படி, 2021-ம் ஆண்டில் அவர் பணியில் சேர்ந்த முதல் 6 மாதங்களுக்கும், பின்னர் ஓராண்டுக்கும் யாரையும் பணியில் சேர்க்கும் திட்டம் நிறுவனத்திற்கு இல்லை என தெரிவித்து உள்ளார்.
எனினும் அவரது இந்த வீடியோவால் அவருக்கு எதிராக கடுமையான விமர்சனங்கள் கிளம்பின. இதனை தொடர்ந்து, தனது பேச்சுக்கு அவர் வேறொரு விளக்கம் அளித்து உள்ளார். நான் வெளியிட்ட ஒரு வீடியோ தவறான வழியில் புரிந்து கொள்ளப்பட்டு விட்டது. மெட்டா நிறுவனத்தில் முதல் 6 மாத காலத்தில் யாரையும் பணியமர்த்தவில்லை மற்றும் எந்த வேலையும் செய்யவில்லை என நான் கூறியபோதும், வேலை எதுவும் செய்யாதபோதும் நான் கற்று கொண்டு இருந்தேன் என விளக்கம் தெரிவித்து உள்ளார்.