
பயன்படுத்தப்படாத அரசாங்க நிலம் தொடர்பில் தரவு வங்கியை நிறுவுமாறு ஜனாதிபதி பணிப்புரை
முதலீட்டுத் தகவல்களை ஆர்வமுள்ள தரப்பினருக்கு இலகுவாகவும் விரைவாகவும் அணுகும் வகையில் அவற்றை டிஜிட்டல் மயமாக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு (PMD) தெரிவித்துள்ளது.
இந்த நடவடிக்கையின் நோக்கம் இலங்கையில் முதலீட்டு வாய்ப்புகளை ஊக்குவித்தல் மற்றும் முதலீட்டாளர்களுக்கு புதிய முதலீட்டு வாய்ப்புகளை இலகுவாக அடையாளம் காண அனுமதிக்கிறது.
இதற்கு மேலதிகமாக விவசாய அபிவிருத்திச் சட்டம் மற்றும் நெல் நிலச் சட்டம் என்பனவற்றையும் தற்போதைய தேவைகளைப் பூர்த்தி செய்ய திருத்தப்பட வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்..
இது இலங்கையின் பொருளாதாரத்திற்கு இன்றியமையாத பங்களிப்பான விவசாயத் துறையில் முதலீட்டு வாய்ப்புகளை எளிதாக்குவதற்கும் ஊக்குவிப்பதற்கும் எதிர்பார்க்கப்படுகிறது. விவசாய அபிவிருத்திச் சட்டம் மற்றும் நெற்பயிர்ச் சட்டம் என்பனவற்றில் உரிய நேரத்தில் திருத்தம் கொண்டு வரப்பட வேண்டுமென ஜனாதிபதி மேலும் வலியுறுத்தியுள்ளார்.