தேர்தலுக்கு பாதிப்பை ஏற்படுத்த வேண்டிய தேவை எனக்கில்லை : அரச அச்சகத் திணைக்கள தலைவர்
அச்சக பணிகளுக்கு நிதி வழங்காமல் வாக்குச்சீட்டு அச்சிடல் பணியை தொடர முடியாது. நிதி வழங்கினாலும் வாக்குச்சீட்டு அச்சிடல் பணிகளை நிறைவு செய்ய மூன்று அல்லது நான்கு நாட்கள் தேவைப்படும்.
தேர்தல் நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படுத்த வேண்டிய தேவை எனக்கு இல்லை. அரசியல் களத்தில் குறிப்பிடப்படும் விடயங்கள் நிராகரிக்கத்தக்கது என அரச அச்சகத் திணைக்கள தலைவர் கங்காலி லியனகே தெரிவித்தார்.
உள்ளுராட்சிமன்றத் தேர்தலுக்கான வாக்குச்சீட்டு அச்சிடல் தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.அவர் மேலும் குறிப்பிட்டதாவது, உள்ளுராட்சிமன்றத் தேர்தல் வாக்கெடுப்பிற்கான வாக்குச்சீட்டு அச்சிடலுக்கு 400 மில்லியன் ரூபா செலவாகும் நிலையில் தேர்தல்கள் ஆணைக்குழு 40 மில்லியன் ரூபாவை மாத்திரம் அரச அச்சகத் திணைக்களத்திற்கு வழங்கியுள்ளது.
மிகுதி 360 மில்லியன் ரூபாவை வழங்காவிட்டால் வாக்குச்சீட்டு அச்சிடல் பணிகளை தொடர முடியாது தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு கடந்த திங்கட்கிழமை உத்தியோகப்பூர்வமாக அறிவித்தோம்.
அச்சக பணிகளுக்கு நிதி வழங்காமல் வாக்குச்சீட்டு அச்சிடல் பணியை தொடர முடியாது.தற்போதைய நிலையில் நிதி வழங்கினால் வாக்குச்சீட்டு அச்சிடல் பணிகளை நிறைவு செய்ய மூன்று அல்லது நான்கு நாட்களேனும் தேவைப்படும்
உள்ளுராட்சிமன்றத் தேர்தல் நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படுத்த வேண்டிய தேவை எனக்கு கிடையாது.நிதி வழங்காத பட்சத்தில் அச்சக பணிகளை தொடர்ந்தால் பின்னர் தோற்றம் பிரச்சினைகளுக்கு யார் பொறுப்பு கூறுவது.ஆகவே நிதி வழங்கல் தொடர்பில் எவரும் உத்தரவாதம் வழங்காத பட்சத்தில் எம்மால் தன்னிச்சையாக செயற்பட முடியாது ஆகவே அரசியல் மட்டத்தில் என்னை தொடர்புப்படுத்தி குறிப்பிடப்படும் விடயங்கள் நிராகரிக்கத்தக்கது என்றார்.