பிரபாகரனை வைத்து பிழைப்பு நடத்தும் தமிழ் அரசியல்வாதிகள் -சரத் பொன்சேகா
பிரபாகரன் உயிரோடு இருப்பதாகவும் அவர் விரைவில் நலமுடன் திரும்பி வருவார் எனவும் உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் நேற்று அறிவித்திருந்தார். அவரது இந்த அறிவிப்பை இலங்கை அரசியல்வாதிகள் பலரும் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். இது தொடர்பாக இலங்கை எம்பியான முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர கூறியதாவது:
பிரபாகரன் இப்போது நரகத்தில்தான் இருக்கிறார். பல லட்சக்கணக்கான பொதுமக்களை படுகொலை செய்தவர் பிரபாகரன். அதனால்தான் நரகத்தில் இருக்கிறார் பிரபாகரன். பிரபாகரனை அழைத்துவர விரும்பினால் பழ.நெடுமாறனும் நரகத்துக்குதான் போக வேண்டும். அங்குபோய்தான் பிரபாகரனை பழ.நெடுமாறன் அழைத்து வர வேண்டும். இவ்வாறு சரத் வீரசேகர கூறினார். இறுதிப் போரை வழிநடத்திய முன்னாள் இராணுவத் தளபதியும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருமான சரத் பொன்சேகா தெரிவித்தார். 14 ஆண்டுகளாக பழ.நெடுமாறன் பொய்யையே திரும்ப திரும்ப சொல்லி வருகிறார் என கூறினார்.