உக்ரைனில் போரை முடிவுக்கு கொண்டுவர மோடியால் முடியும் - அமெரிக்கா
உக்ரைன் மீது ரஷ்யா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் போர் தொடுக்க ஆரம்பித்த நிலையில் கிட்டத்தட்ட ஒரு ஆண்டு போர் நடந்து வருகிறது. உக்ரைன் நாட்டிற்கு அமெரிக்கா மற்றும் ஐக்கிய நாடுகள் ஆதரவாளித்த போதிலும் உக்ரைன் பெரும் சேதத்தை சந்தித்து வருகிறது என்பதும் இதனால் இந்த போரை நிறுத்த பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் அமெரிக்காவில் வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் இன்று செய்தியாளர்களிடம் பேசிய போது ’இந்திய பிரதமர் மோடியால் உக்ரைன் - ரஷ்ய போரை நிறுத்த முடியும் என்றும் அவர் ரஷ்ய அதிபர் புதினை சந்தித்து போரை நிறுத்த வலியுறுத்தினால் கண்டிப்பாக இந்த போர் முடிவுக்கு வரும் என்று நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
போரை நிறுத்த இந்திய பிரதமர் மோடி அவர்கள் என்னென்ன முயற்சி எடுக்க வேண்டுமோ அதை அவரிடமே விட்டுவிடுகிறேன் என்றும் பிரதமர் மோடி என்ன முடிவு எடுத்தாலும் அதை அமெரிக்கா வரவேற்கும் என்றும் தெரிவித்துள்ளார்.