பெருவில் பறவைக் காய்ச்சல்
லத்தீன் அமெரிக்க நாடான பெருவில் கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக பறவை காய்ச்சல் கண்டறியப்பட்டது. இதுதொடர்பாக உடனடிய நடவடிக்கை எடுத்த அதிகாரிகள் கோழிப்பண்ணையில் இருந்த 37 ஆயிரம் பறவைகளை அழித்தனர். எனினும் இந்த பறவைக்காய்ச்சல் பண்ணை பறவைகளை தாண்டி பிற காட்டு பறவைகள் இடையேயும் பரவியுள்ளது.
காட்டு நாரைகள், வாத்துகள் என பெருவின் பாதுகாக்கப்பட்ட கடலோரப்பகுதியில் 55,000 பறவைகள் உயிரிழந்துள்ளன. தற்போது இந்த பறவைக்காய்ச்சல் கடல் விலங்குகளையும் பாதித்துள்ளது. சில பென்குவின்கள் இறந்துள்ள நிலையில், 585 கடல் சிங்கங்களும் பறவைக்காய்ச்சலால் இறந்து கரை ஒதுங்கியுள்ளது.
இதனால் கடற்கரைகளில் கடல் சிங்கங்கள், பறவைகளிடம் நெருங்க வேண்டாம் என எச்சரித்துள்ள தேசிய வனவிலங்குகள் சேவை துறை, மேலும் காய்ச்சல் பரவாமல் தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.