Ads
100 ரூபாய் லஞ்சம் வாங்கியவருக்கு 32 ஆண்டுகள் கழித்து சிறைதண்டனை
கடந்த 1991 ஆம் ஆண்டு 100 ரூபாய் லஞ்சம் பெற்றதாக ராம் நாராயணா என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. திவாரி என்பவரின் ஓய்வூதியத்தை கணக்கிடுவதற்காக 100 ரூபாய் லஞ்சம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டது.
இந்த நிலையில் தற்போது ராம் நாராயணா ஓய்வு பெற்ற 82 வயதாக இருக்கும் நிலையில் 32 ஆண்டுகள் கழித்து இந்த வழக்கின் தீர்ப்பு வெளியாகியுள்ளது. இந்த தீர்ப்பில் ராம்நாராயணா குற்றவாளி என உறுதி செய்யப்பட்டு அவருக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனையும் 15 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
தனது வயதை காரணம் காட்டி சிறை தண்டனையை குறைக்க ராம் நாராயணா கேட்டுக்கொண்ட நிலையில் அதை நீதிபதி நிராகரித்துள்ளார்.
Info
Ads
Latest News
Ads