துருக்கி, சிரியாவில் சிக்கியுள்ள தமிழர்கள் கவனத்திற்கு.. உதவி எண்கள் அறிவிப்பு
துருக்கி நாட்டின் தென்கிழக்கு பகுதியில் சிரியாவின் எல்லையையொட்டி அமைந்துள்ள காசியான்டெப் நகரத்தில் நேற்று முன்தினம் அதிகாலையில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டரில் 7.8 புள்ளிகள் அளவில் பதிவான இந்த நிலநடுக்கம் துருக்கி நாட்டையும், அதன் அண்டை நாடான சிரியாவையும் நிலைகுலைய வைத்துள்ளது. நிலநடுக்கத்தால் பலியானோர் எண்ணிக்கை 7.700-ஐ தாண்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. துருக்கியின் 10 மாகாணங்களில் மட்டும் 3,419 பேர் மண்ணோடு புதைந்து மரணத்தை தழுவி உள்ளனர்.
20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், துருக்கி மற்றும் சிரியாவில் தமிழர்கள் பாதிக்கப்பட்டிருந்தால், அவர்களுக்கு உதவ அயலக தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையம் தயாராக உள்ளதாக அறிவித்துள்ளது. மேலும் இந்திய வெளியுறவுத்துறை மற்றும் தூதரகத்துடன் தொடர்பில் இருப்பதாகவும் துருக்கி மற்றும் சிரியாவில் பாதிப்புக்குள்ளாகியிருந்தால் உடனடியாக தொடர்பு கொள்ள தொலைபேசி எண்களும் 044- 28525648, 044 - 28515288 வெளியிடப்பட்டுள்ளது.