Ads
பெண் கைதிக்கு கன்னித்தன்மை சோதனை: டெல்லி ஐகோர்ட் கண்டனம்
பெண் கைதிக்கு கன்னித்தன்மை சோதனை செய்வது அரசியல் சட்ட விதிமீஏல் என டெல்லி ஐகோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது.
போலீசாரால் பிடிக்கப்படும் பெண் குற்றவாளிகள் சிறைக்கு அனுப்புவதற்கு முன்னால் கன்னித்தன்மை பரிசோதனை நடத்தப்பட்டு வருவதாக கூறும் தகவலுக்கு டெல்லி ஐகோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது
இது அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்றும் அரசியல் சாசன பிரிவு 21ஐ மீறும் செயலாகும் என்றும் டெல்லி ஐகோர்ட் நீதிபதி தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து தகவலை அனைத்து விசாரணை முகமைகள் மற்றும் உள்துறை அமைச்சர்கள் செயலகம் மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் ஆகிவற்றுக்கு அனுப்பப்பட வேண்டும் என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார்.
Info
Ads
Latest News
Ads