துப்பாக்கி காட்டி மிரட்டிய ராணுவத்தினர்? சுற்றிவளைத்த மக்கள்
வேலூரில் இருந்து ராணுவ தளவாடங்களை ஏற்றிக் கொண்டு மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் 3 வாகனங்கள் உதவி ஆய்வாளர் பிரதாப் தலைமையில் பெங்களூர் நோக்கி சென்றுக் கொண்டிருந்துள்ளன.
ஓசூர் அருகே சென்றபோது அப்பகுதியில் சென்ற அரசு பேருந்து ஒன்று ராணுவ வாகனங்களுக்கு வழிவிடாததாக கூறப்படுகிறது. இதனால் அந்த பேருந்தை நிறுத்திய ராணுவத்தினர் அரசு பேருந்து ஓட்டுனரை தாக்கியுள்ளனர்.
இதனால் அவர் ராணுவ வாகனங்கள் செல்லமுடியாதபடி பேருந்தை குறுக்கே நிறுத்தியுள்ளார். பேருந்தில் பயணித்த பயணிகளும் ஓட்டுனருக்கு ஆதரவாக பேசப்போக 5க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் துப்பாக்கியை காட்டி மிரட்டியுள்ளனர். இதனால் அங்கு மேலும் பரபரப்பு எழுந்துள்ளது.
தகவலறிந்து சம்பவ இடம் சென்ற காவல்துறையினர் இருதரப்பினரையும் சமாதானம் செய்ய முயற்சி செய்தனர். பின்னர் ராணுவத்தினர் பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்ட பிறகு அனைவரும் கலைந்து சென்றுள்ளனர். இதனால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்தில் இடையூறு ஏற்பட்டுள்ளது.