Ads
துருக்கியை அடுத்து சிரியா தலைநகரிலும் நிலநடுக்கம்
துருக்கியில் இன்று அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக சுமார் 1300 பேரும் பலியானதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று மாலை துருக்கியில் மீண்டும் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக ஏராளமான கட்டிடங்கள் இடிந்து விழுந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இந்த நிலையில் துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை அடுத்து சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸ் என்ற பகுதியில் மீண்டும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் அச்சத்துடன் சாலையில் ஓடும் காட்சியை காண முடிவதாக அந்நாட்டில் உள்ள ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதுவரை நிலநடுக்கம் காரணமாக 1300க்கும் அதிகமானோர் பலியாகி இருப்பதாகவும் ஆயிரத்துக்கும் அதிகமானோர் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
Info
Ads
Latest News
Ads