Category:
Created:
Updated:
தெலுங்கானா மாநிலத்தில் முதல்வர் சந்திரசேகரராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி ஆட்சி நடந்து வருகிறது.
தற்போது, தெலுங்கானா மாநிலத்திற்கு என தலை நகர் ஐதராபாத்தில் புதிதாக ஒரு தலைமைச் செயலகம் கட்டப்பட்டு வருகிறது. இது வரும் 17 ஆம் தேதி திறக்கப்பட இருந்தது.
இந்நிலையில், இன்று அதிகாலையில், இக்கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. உடனே தீ அனைத்து தளங்களிலும் பரவி புகை மண்டலமாக மாறியது.
இதுகுறித்து தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர், தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில், எந்த விபத்தில் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்த விபத்து குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து வருகின்றனர்.