Category:
Created:
Updated:
எமது அழகிய நாடு சீரழிவதற்கு ராஜபக்ஷ ரணில் கூட்டுக்கம்பனியே காரணம். இவ்வாறு திருக்கோவிலில் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் உரையாற்றிய ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
எனது தந்தையார் ரணசிங்க பிரேமதாசா உருவாக்கிய தம்பட்டை ஆடைத் தொழிற்சாலை மீள திறக்கப்படும். இளைஞர்கள் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்பு வழங்கப்படும் என்றார்.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் முதலாவது தேர்தல் பிரச்சார கூட்டம் அம்பாறை மாவட்ட அமைப்பாளர் வெள்ளையன் வினோகாந்த் தலைமையில் நேற்று (31) செவ்வாய்க்கிழமை திருக்கோவில் பிரதேசத்தில் இடம்பெற்றபோது அவர் மேற்கண்டவாறு கூறினார்.