Category:
Created:
Updated:
நிலாவரை பகுதியில் 3 லீற்றர் கசிப்புடன் இளைஞன் ஒருவர் கைதுசெய்யப்பட்டு உள்ளதாக காங்கேசன்துறை விசேட குற்றத்தடுப்பு பொலிசார் தெரிவித்தனர்.கிடைத்த தகவலுக்கு அமைய சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.கைது செய்யப்பட்ட சந்தேக நபருக்கு வயது 36 என தெரிவிக்கப்பட்டுள்ளது.அவர் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். சந்தேக நபருக்கு எதிராக மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.