Category:
Created:
Updated:
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலம் அடைந்தவர் நடிகை ரைசா வில்சன். அதன்பிறகு ‘பியார் பிரேமா காதல்’ படத்தின் மூலம் நாயகியாக தமிழ் திரையுலகில் ரசிகர்களுக்கு அறிமுகமானார். தொடர்ந்து நடித்து வருகிறார்.
சமீபத்தில் ரைசா வெளியிட்ட செய்தியில், “முகப் பொலிவு செய்வதற்காக அழகியல் மருத்துவரிடம் சென்றேன். அப்போது தேவையற்ற சில விஷயங்களை செய்து எனது முகத்தின் ஒரு பக்கம் வீங்கி விட்டது. இவ்வாறு அவர் குற்றம் சாட்டியிருந்தார்.
இந்த நிலையில் தவறான முகப்பொலிவு சிகிச்சை அளித்ததால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், எனவே ரூ. 1 கோடி நஷ்டஈடு தர வேண்டும் என்றும் கேட்டு ரைசாவின் வக்கீல், சம்பந்தப்பட்ட அழகியல் மருத்துவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.