Category:
Created:
Updated:
மக்கள் திலகமும் தமிழக முன்னாள் முதலமைச்சர் எம்.ஜீ.ஆர்.அவர்களின் 106 வது பிறந்த நேற்றைய தினம். பிறந்தநாள் கொண்டாட்டம் குரு நகர் பகுதியில் அமைந்துள்ள எம் ராமச்சந்திரன் அவர்களின் சிலைக்கு முன்னாள் இடம் பெற்றது.
குருநகர் எம் ஜி ஆர் நற்பணி மன்றத்தின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.இதன் போது எம்ஜிஆர் அவர்களின், நினைவு திரைக்கல்லினை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம் கே சிவாஜிலிங்கம் அவர்கள் திறந்து வைத்தார்.அதேபோல் அறிஞர் அண்ணா அவர்களின் திரை நினைவுக்கு கல்லினை முன்னாள் மாநகர சபை மேயர் இமானுவேல் ஆர்ணோல்ட் திரை நீக்கம் செய்து வைத்தார்.இதன்போது 106 வது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் எம்ஜிஆர் நற்பணி மன்றத்தினால் 150 ஏழை குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.