Category:
Created:
Updated:
சீனாவில் கொரோனாவினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாகி வருகிறது என்றும் தினசரி கோடிக்கணக்கில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப் பட்டவர்கள் தினசரி எண்ணிக்கையை இனி வெளியிடப் போவதில்லை என சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. டிசம்பர் ஒன்று முதல் டிசம்பர் 20 வரை சீனாவில் சுமார் 25 கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என சீன அரசு நடத்திய ஆய்வில் வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில் இந்த முடிவை சீன அரசு எடுத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.