சீனாவில் ஒரேநாளில் 3.70 கோடி பேருக்கு கொரோனா
சீனாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள சிச்சுவான் மாகாணத்தில் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 50 சதவிகிதத்திற்கு அதிகமானோருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மருத்துவமனைகளில் கூட்டம் அலைமோதுவதாகவும், மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு வழங்க ரத்தம் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், கொரோனா பாதிப்பால் உயிரிழப்புகளும் பல மடங்கு அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து தப்பிக்க மக்கள் பெருநகரங்களில் இருந்து வெளியேறி கிராமங்களை நோக்கி செல்வதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, வயது முதிர்ந்தோர் அதிக அளவில் உயிரிழப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இடுகாடுகளில் உடல்களின் வருகை பல மடங்கு அதிகரித்துள்ளதாகவும், மருத்துவமனைக்கு வெளியே வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதற்கான வீடியோ ஆதாரங்களும் சமூகவலைதளத்தில் பரவி வருகிறது.
வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த முடியாமலும், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிப்பாலும் அதிகாரிகள் திணறி வருகின்றனர்.