Category:
Created:
Updated:
சீனாவில் உருமாறிய கொரோனா வைரஸான பிஎஃப்-7 ஒமைக்கான் பரவலாம் மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், சீனாவில் கொரோனா மட்டுமின்றி நிமோனியா, சுவாச கோளாறுகள் போன்ற நோய்களினாலும் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.
இந்த வாரம் மட்டும் சீனாவில் சுமார் 3.7 கோடி மக்கள் கொரொனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், டிசம்பர் மாதத்தில் மட்டும் அங்கு 248 மில்லியன் மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதுவரை உலகில் இல்லாத அளவு அதிகளவு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளது இதுதான் முதன் முறையாகும். எனவே, பெய்ஜிங், ஷாங்காய், உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் பலர் ஊரடங்கு போல் வீட்டில் முடங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.