Category:
Created:
Updated:
இன்று செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இடம் பத்திரிகையாளர் ஒருவர் கேள்வி கேட்டபோது அவர் பத்திரிகையாளரை ஒருமையில் பேசினார்.
உனக்கு பைத்தியம் பிடித்திருக்கிறது என்றும் நீ மனநல மருத்துவரை பாருங்கள் என்றும் நீ என்னுடைய பத்திரிகை சந்திப்புக்கு வராதே என்றும் அநாகரீகமாக திட்டினார்.
கருத்து சுதந்திரம் என்று கூறிவிட்டு ஏன் இப்படிக் கேட்கிறீர்கள் என்று அந்த பத்திரிகையாளர் கேட்டபோது மீண்டும் அவர்கள் அநாகரீகமாக பேசியதை அடுத்து அவர் உடனே மன்னிப்பு கேட்க வேண்டும் என பத்திரிகையாளர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.