Ads
ஆ.ராசாவின் சொத்துக்கள் முடக்கம்
முன்னாள் மத்திய அமைச்சரும் திமுக எம்பியுமான ஆ ராசாவுக்கு சொந்தமான 55 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை முடக்க அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த 2015 ஆம் ஆண்டு ஆ ராசா மற்றும் அவரது குடும்பத்தினர் உள்பட 16 பேருக்கு எதிராக வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த நிலையில் திமுக எம்பி ராசாவின் பினாமி நிறுவனத்திற்கு சொந்தமான 55 கோடி ரூபாய் மதிப்புள்ள 45 ஏக்கர் நிலம் முடக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத் துறை அறிவித்துள்ளது.
முறைகேடான பண பரிமாற்றம் மூலம் இந்த நிலம் வாங்கப்பட்டு உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளதாகவும் அமலாக்கத்துறை விளக்கமளித்துள்ளது. திமுகவின் முக்கிய புள்ளியான ஆ ராசாவின் மீது அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக திமுக தரப்பில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Info
Ads
Latest News
Ads