Category:
Created:
Updated:
இந்த முறை பொங்கலுக்கு இலவச அரிசி, சர்க்கரை மற்றும் ரூ.1000 பணமும் வழங்கப்படும் என தமிழக முதல்வர் அறிவித்தார். இலவசமாக வழங்கப்படும் பொருட்களில் முந்தைய காலங்களில் கரும்பும் வழங்கப்பட்ட நிலையில் தற்போது கரும்பு வழங்கப்படாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இந்த இலவச அறிவிப்பு குறித்து விமர்சித்து பேசியுள்ள நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் “பொங்கலுக்கு அரசு இலவச அரிசி, சர்க்கரை வழங்குவதை தேசிய இன அவமானமாகவே நான் கருதுகிறேன். பொங்கலுக்கு ரேஷனில் கரும்பு தர வேண்டும் என பலர் பேசுவதை நான் ஏற்கவில்லை. முழு கரும்பு தராவிட்டால் மட்டும் என்ன ஆகிவிடப்போகிறது” என்று கூறியுள்ளார்.