இந்த ஆண்டின் டாப் 10 பணக்காரர்கள்
கடந்த சில ஆண்டுகளில் கொரோனாவால் பாதித்திருந்த மக்களும், பொருளாதாரமும் இந்த ஆண்டு நன்கு முன்னேறியுள்ளது. பொருளாதார நெருக்கடிகளை தாண்டி பல நிறுவனங்கள் தீவிர முயற்சியின் பேரில் தங்கள் வெற்றி இலக்கை அடைந்துள்ளன. இந்த ஆண்டில் அதிகம் வருமானம் ஈட்டிய டாப் 10 பணக்காரர்கள் பட்டியல்....
10. ஸ்டீவ் பால்மர்
அமெரிக்காவின் பிரபல தொழிலதிபர் ஸ்டீவ் பால்மர். இவரது ஆண்டு சொத்து மதிப்பு 79.7 பில்லியன் அமெரிக்க டாலர்கள்
9. கார்லோஸ் ஸ்லிம் ஹெலு
மெக்சிகோவை சேர்ந்த கார்லோஸ் தொழிலதிபர். இவரது இந்த ஆண்டு சொத்து மதிப்பு 81 பில்லியன் அமெரிக்க டாலர்கள்.
8. முகேஷ் அம்பானி
உலக பணக்காரர்கள் பட்டியலில் இடம்பிடித்த இரண்டாவது இந்தியர் முகேஷ் அம்பானி. முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 91 பில்லியன் அமெரிக்க டாலர்கள்.
7. லாரி எல்லிசன்
அமெரிக்காவை சேர்ந்த லாரி எல்லிசன் தொழிலதிபர். இவரது மொத்த சொத்து மதிப்பு 102 பில்லியன் அமெரிக்க டாலர்கள்.
6. வாரன் பஃபெட்
இவர் உலக பணக்காரர் மட்டுமல்ல, முதலீட்டாளர்களுக்கு ஒரு நடமாடும் காட்ஃபாதர்.
5. பில் கேட்ஸ்
உலக பணக்காரர்கள் பட்டியல் என்றாலே ஒரு காலத்தில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து பலரையும் வியக்க வைத்தவர் பில் கேட்ஸ். பில்கேட்ஸின் தற்போதைய சொத்து மதிப்பு 104.9 பில்லியன் டாலர்
4. ஜெப் பெசோஸ்
உலக பிரபலமான அமேசான் நிறுவனத்தை தொடங்கிய ஜெப் பெசோஸ். இவரது மொத்த சொத்து மதிப்பு 111.5 பில்லியன் டாலர்.
3. கௌதம் அதானி
உலக பணக்காரர்களில் மூன்றாவது இடத்தில் உள்ள கௌதம் அதானி இந்தியாவை சேர்ந்தவர். இவரது சொத்த மதிப்பு 133.2 பில்லியன்
2. எலான் மஸ்க்
நிகழ்கால அயர்ன்மேன் என செல்லமாக அழைக்கப்படுபவர் எலான் மஸ்க். இவரது உலகளாவிய சொத்து மதிப்பு 174.8 பில்லியன் டாலர்.
1. பெர்னார்ட் அர்னால்ட்
உலக பணக்காரர்களில் முதலிடத்தில் உள்ளவர் பிரான்சை சேர்ந்த பெர்னார் அர்னால்ட். LVMH எனப்படும் Louis Vuitton Moet Henessy என்னும் நிறுவனத்தை நிறுவியவர் இவர். பிரான்சை தலைமையகமாக கொண்ட இந்நிறுவனம் உலகம் முழுவதும் ஆடம்பரமான அழகுசாதன பொருட்களை உற்பத்தி, விநியோகம் செய்து வருகிறது. இவரது உலகளாவிய சொத்து மதிப்பு 184.3 பில்லியன் டாலர்.