10,000 பேரை கொலை செய்ய உதவிய பெண்ணுக்கு 2 வருடம் சிறைத்தண்டனை
ஹிட்லர் காலத்தில் பத்தாயிரம் பேரை கொலை செய்ய உதவிய பெண்ணுக்கு வெறும் இரண்டு வருடம் மட்டுமே சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
1942 முதல் 45 வரை நடைபெற்ற இரண்டாம் உலகப் போரின்போது ஹிட்லரின் நாஜி படைகள் எதிரி நாட்டு வீரர்களை சிறையில் வைத்து சித்திரவதை செய்து கொலை செய்தது.
இந்த நிலையில் ஹிட்லரின் அமைப்பு ஒன்றில் அதிகாரியாக பணி செய்த பெண் ஒருவருக்கு தற்போது 90 வயது ஆகிவிட்ட நிலையில் அவர் மீது 10000 பேரை கொலை செய்த வழக்கு தொடரப்பட்டது. அவரது தலைமையில் தான் சுமார் 10 ஆயிரம் பேர்கள் வரை கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் அவருக்கு ஜெர்மனி நீதிமன்றம் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.
அந்த பெண் குற்றம் புரிந்த போது அவருக்கு வெறும் 17 வயதுதான் என்றும் இதனை அடுத்துகு சிறுவர் சட்டத்தின் கீழ் அதிகபட்சமாக இரண்டு தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.