அமெரிக்காவில் காய்ச்சல் தடுப்பு மருத்துகளுக்கு கட்டுப்பாடு
அமெரிக்காவில் கொரோனா தொற்று உள்ளிட்ட காய்ச்சல் தடுப்பு மருத்துகள் விற்பனைக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தென் கொரியா, பிரேசில், அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகளில் மீண்டும் கொரொனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், விரைவில் உலகம் முழுவதும் கொரொனா 4 வது அலை வர வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில்,கடந்த இரண்டரை ஆண்டுகளாக அமெரிக்காவில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்த நிலையில், தற்போதுதான் ஓரளவு குறைந்துள்ளது. இந்நிலையில், குளிர்காலம் தொடங்கியுள்ளதால் கொரோனா, ப்ளூ காய்ச்சல், சுவாசதி பாதிப்புகள் ஆகியவை ஏற்படலாம் என அமெரிக்க நோய்க் கட்டுப்பாடு தடுப்பு மையம் எச்சரித்துள்ளது.
இந்த நிலையில், காய்ச்சல் தடுப்பு மருந்து உற்பத்தியில் ஈடுபட்டுள்ள பிரபல நிறுவனமான சிவிஎஸ் இந்த மருத்துகள் கடைகளில் விற்க கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. இதனால், பொதுமக்கள் கடைகளில் காய்ச்சல் தடுப்பு மருத்துகள் வாங்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.