முடிவு எடுக்காமல் இருந்தால் தகுதியற்றவராகி விடுவீர்கள்: ஆளுநர் ரவி
தமிழக சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட மசோதாக்கள் பல கவர்னரின் கையெழுத்துக்காக காத்திருக்கிறது என்றும் கவர்னர் எந்த முடிவும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வருவதாக அவர் மீது விமர்சனம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கவர்னர் ஆர்.என்.ரவி, ‘எந்த முடிவும் எடுக்காமல் இருந்தால் தகுதியற்றவர் ஆகிவிடுவீர்கள் என்று பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இன்று யுபிஎஸ்சி தேர்வர்களுடன் நடந்த கலந்துரையாடலில் ஆளுநர் ரவி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியபோது குடிமை பணியாளர்கள் முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டியவர்கள். சில நேரம் தவறான முடிவுகள் எடுக்க நேரிடலாம். அப்படி நானும் எடுத்திருக்கிறேன். ஆனால் எந்த முடிவும் எடுக்காமல் இருந்து விடக்கூடாது. முடிவெடுக்கவில்லை என்றால் தகுதியற்றவர்களாக ஆகிவிடுவீர்கள்’ என்று பேசியுள்ளார்.. அவரது பேச்சை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.