கால்பந்தாட்ட ஜாம்பவான் டியாகோ மரடோனா இருதய நோயால் பாதிக்கப்பட்ட நிலையில் தனது 60 ஆவது வயதில் உயிரிழந்துள்ளார்
அர்ஜெண்டினா அணியின் முன்னாள் கேப்டனும், கால்பந்து வீரருமான டியாகோ மரடோனா 60 ஆவது வயதில் மாரடைப்பு காரணமாகக் காலமானார். கடந்த நவம்பர் 3-ம் தேதி மூளையில் ரத்தக் கசிவு கண்டறியப்பட்டு அறுவை சிகிச்சைமேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது இறப்பையொட்டி அர்ஜெண்டினா ஜனாபதிபதி ஆல்பர்டோ பெர்னாண்டஸ் மூன்று தினங்கள் தேசிய துக்கத்தை அறிவித்துள்ளார். அவரது மறைவு கோடிக்கணக்கான கால்பந்தாட்ட ரசிர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
உலகின் மிகச்சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவராகக் கருதப்படும் மாரடோனா, நான்கு உலகக் கிண்ண போட்டிகளில் விளையாடியுள்ளார். 1986 இல் மாரடோனா தலைமையிலான ஆர்ஜென்டீனா அணி உலக கிண்ணத்தை வென்றது.அப்போட்டியின் சிறந்த வீரராகவும் தேர்வான அவர், ஆர்ஜென்டீனா அணிக்காக 91 போட்டிகளில் விளையாடி 34 கோல்களை அடித்துள்ளார். 1986 ல் நடைபெற்ற உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் அர்ஜென்டினா வெற்றிவாகை சூடுவதற்கு முக்கியக் காரணமாகத் திகழ்ந்தார். அணியின் கேப்டனாக சிறப்பாகச் செயல்பட்டு வீரர்களை சிறப்பாக வழிநடத்தினார். அந்தத் தொடரில் இங்கிலாந்துக்கு எதிரான காலிறுதிப் போட்டியில் மரடோனா அடித்த கோல் இன்றுவரை கால்பந்து வரலாற்றில் மிகச்சிறந்த கோல்களில் ஒன்றாகக் குறிப்பிடப்படுகிறது.