உதயநிதியால் அமைச்சரவையில் ஏகப்பட்ட மாற்றம்
உதயநிதி ஸ்டாலின் தேர்தலில் போட்டியிட்டது முதலே அவர் அமைச்சர் ஆவார் என பேசிக்கொள்ளப்பட்ட நிலையில் இன்று 'உதயநிதி ஸ்டாலின் எனும் நான்' என்று தொடங்கிய உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாடு அமைச்சரவையில் 35-வது அமைச்சராக பதவியேற்றுக்கொண்டார்.
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, உதயநிதி ஸ்டாலினுக்கு பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்துவைத்தார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை உதயநிதிக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனால் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சராக இருந்த மெய்நாதனுக்கு சுற்றுச்சூழல் மற்றும் கால்நிலை மாற்றத்துறை அமைச்சர் பொறுப்பு மாற்றி வழங்கப்பட்டுள்ளது.
இதை தவிர வேறு சில துறைகளில் மாற்றங்களும் கொண்டுவரப்பட உள்ளது என பேசிக்கொள்ளப்படுகிறது. அதன்படி, அமைச்சர் மதிவேந்தன் சுற்றுலாத்துறையில் இருந்து வனத்துறைக்கும், அமைச்சர் கே.ராமசந்திரன் வனத்துறையில் இருந்து சுற்றுலாத்துறைக்கும் மாற்றப்படலாம்.
மேலும், அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பனுக்கு கூட்டுறவுத்துறை மற்றும் முன்னாள் ராணுவத்தினர் நலன், ஐ.பெரியசாமிக்கு ஊரக வளர்ச்சித்துறை, தங்கம் தென்னரசிடம் மனித வள மேலாண்மை துறை வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.