Category:
Created:
Updated:
ஆப்கானிஸ்தானில் வடக்கு குண்டுஸ் மாகாணத்தின் தலைநகர் குண்டுஸ் அருகே பயணிகளை ஏற்றி கொண்டு பஸ் சென்று கொண்டிருந்தது. சாலையில் அதிக வேகத்தில் சென்ற பேருந்து திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் தறிக்கெட்டு ஓடிய பஸ் சாலையில் தலைக்குப்புற கவிழ்ந்தது. இந்த கோர விபத்தில் பெண்கள், சிறுவர்கள் உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் 28 பேர் பலத்த காயம் அடைந்தனர்.