Category:
Created:
Updated:
தெலுங்கானா மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவின் சகோதரி ஷர்மிளா அரசுக்கு எதிராக திடீரென உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இந்த நிலையில் அவர் உண்ணாவிரதம் இருந்து கொண்டிருந்தபோது திடீரென அவர் மயங்கி விழுந்ததாகவும் உடனடியாக அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மூன்றாவது நாளாக இன்று ஷர்மிளா உண்ணாவிரதம் இருந்துவரும் நிலையில் அவர் திடீரென மயங்கி விழுந்ததால் தற்போது ஐதராபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
முதலமைச்சருக்கு எதிராக அவரது சகோதரி உண்ணாவிரதம் இருந்து திடீரென மயங்கி விழுந்த சம்பவம் அந்த மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.