Category:
Created:
Updated:
59 வயதான நடிகர் விவேக் நேற்று காலை திடீர் மாரடைப்பால் பாதிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
நடிகர் விவேக் இன்னும் ஆபத்தான நிலையில்தான் இருக்கிறார் என்றும் 24 மணிநேரத்திற்கு பிறகே அவரது உடல்நிலை குறித்து சொல்ல முடியும் என்றும் கூறினர். இந்நிலையில் நடிகர் விவேக் இன்று காலை 4.35 மணிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவரது மறைவு ரசிகர்கள் மற்றும் திரைத்துறை பிரபலங்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரபலங்கள் பலரும் தங்களின் சமூக வலைதள பக்கத்தில் நடிகர் விவேக்கின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
மூடபழக்க வழக்கங்களை ஒழிப்பதற்காக சினிமாவில் புரட்சிகரமான கருத்துக்களை நடித்துக் காட்டியவர் விவேக். சின்னக்கலைவாணர் என்றும் அழைக்கப்பட்டார்.