Category:
Created:
Updated:
தமிழக ஆளுநரை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான குழு, ‘ திமுக அரசு மீது குற்றச்சாட்டு கூறும் மனுவை அளித்துள்ளதாக தெரிகிறது.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, ‘ திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது என்றும் காவல்துறை சரியான நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் தான் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்து உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்
மேலும் அரசின் அனைத்து துறைகளிலும் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது என்றும் அரசு மருத்துவமனைகளில் மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் தமிழகத்தில் திறமையற்ற பொம்மை முதலமைச்சர் ஆட்சி செய்து வருகிறார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்