Ads
சிரியாவின் கோபேன் நகரில் துருக்கி ஏவுகணை தாக்குதல்
சிரியா நாட்டில் கிளர்ச்சியாளர்கள் அரசுக்கு எதிரான போரில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 2011-முதல் நடைபெற்று வரும் இந்த போரால் பெண்கள், குழந்தைகள் உள்பட அந்நாட்டின் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனினும், போர் முடிவுக்கு வராமல் நீடித்து வருகிறது. இந்த நிலையில், சிரியாவின் வடக்கு மாகாணங்களை குறி வைத்து துருக்கி ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. சிரிய-குர்திஷ் படைகள் கட்டுப்பாட்டில் உள்ள கோபனே நகரை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சிரியாவின் சிரியாவின் வடக்கு மாகாணமான அலெப்போ மற்றும் வடகிழக்கு மாகாணமான ஹசாகே பகுதிகளில் வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டதாக சிரிய-குர்தீஷ் படையை சேர்ந்த செய்தி தொடர்பாளர் ஷமி தெரிவித்துள்ளார்.
Info
Ads
Latest News
Ads