Ads
தினமும் 30 பேருக்கு மெட்ராஸ் ஐ பாதிப்பு
சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் தற்போது மெட்ராஸ் ஐ என்ற நோய் பரவி வருவதாகவும் இதனால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாகி வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் மதுரை மாவட்டத்தில் தினமும் 30 பேருக்கு மெட்ராஸ் ஐ பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இதுவரை 210க்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் மதுரை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஆனால் அதே நேரத்தில் மெட்ராஸ் ஐ குறித்து பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்றும் தகுந்த சிகிச்சை எடுத்துக் கொண்டால் சில நாட்களில் குணமாகி விடலாம் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் மெட்ராஸ் ஐ குறித்த விழிப்புணர்வையும் பொதுமக்களுக்கு மருத்துவர்கள் தெரிவித்து வருகின்றனர்.
Info
Ads
Latest News
Ads