Category:
Created:
Updated:
சமீபத்தில் அமித்ஷா சென்னை வந்தபோது அவரை முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் சந்தித்தார் என்பதும், அதுகுறித்த புகைப்படங்கள் வைரல் ஆனது.
இந்த நிலையில் அமைச்சர் அமித்ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்திக்காத நிலையில் இது குறித்த கேள்விகளுக்கு அவர் பதில் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியபோது மத்திய அமைச்சர் அமைச்சர் அமித்ஷா சென்னைக்கு வரும்போதெல்லாம் நாங்கள் அவரை சந்திக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கூறினார். மேலும் பாரதிய ஜனதா கட்சி ஒரு தேசிய கட்சி என்றும் அதிமுக தமிழ் நாட்டின் பிரதான எதிர்க்கட்சி என்றும் அவர் தெரிவித்துள்ளார். அதிமுக கூட்டணியில் டிடிவி தினகரனை ஒருபோதும் ஏற்க முடியாது என்றும் அவர் கேள்வி ஒன்றுக்கு திட்டவட்டமாக பதில் கூறினார்.