Ads
முருகன் உள்ளிட்ட 4 பேருக்கும் பாஸ்போர்ட் பெற நடவடிக்கை: அமைச்சர் ரகுபதி
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்கிய 7 தமிழர்கள் 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் தண்டனை அனுபவித்தனர்.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்ட நிலையில் சமீபத்தில் மீதமுள்ள 6 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் முருகன் உள்பட 4 பேரும் பாஸ்போர்ட் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் ரகுபதி அவர்கள் தெரிவித்துள்ளார். முருகன் உள்ளிட்ட 4 பேரும் அவர்கள் செல்ல விரும்பும் நாடுகளுக்கு செல்ல அனுமதிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Info
Ads
Latest News
Ads