Category:
Created:
Updated:
அமெரிக்காவின் ஆளில்லா விண்வெளி விமானம் ஒன்று 6-வது முறையாக விண்ணில் செலுத்தப்பட்டு ஏறக்குறைய 908 நாட்கள் பயணம் முடிந்து வெற்றியுடன் பூமிக்கு திரும்பி சாதனை படைத்து உள்ளது. இதுபற்றி போயிங் விமான நிறுவனம் வெளியிட்டு உள்ள அறிக்கையில், எங்களது போயிங் நிறுவனம் தயாரிப்பில் உருவான எக்ஸ்-37பி சுற்று வட்டப்பாதை சோதனை வாகனம் (ஓ.டி.வி.) விண்வெளியில் புதிய சாதனை பதிவாக, 908 நாட்கள் தனது சுற்று வட்டப்பாதையில் பயணித்து விட்டு அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள நாசா விண்வெளி அமைப்பின் கென்னடி விண்வெளி தளத்தில் நேற்று வந்து தரையிறங்கி உள்ளது.
இதற்கு முன்பு சுற்று வட்டப்பாதையில் 780 நாட்கள் பயணித்து இருந்தது. தனது முந்தின சாதனையை தற்போது முறியடித்து உள்ளது என மகிழ்ச்சி தெரிவித்து உள்ளது.