Category:
Created:
Updated:
சுற்றுலா இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு நீதிமன்றம் பயணத் தடை விதித்துள்ளது. இராஜாங்க அமைச்சர் வெளிநாடு செல்வதை 2022 டிசம்பர் 17 ஆம் திகதி வரை தடுக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இராஜாங்க அமைச்சரின் குடியுரிமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, சட்டத்தரணி குணரத்ன வன்னிநாயக்க மற்றும் பல சட்டத்தரணிகளால் தாக்கல் செய்யப்பட்ட பிரேரணையின் ஊடாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இராஜாங்க அமைச்சர் டயானா கமகே செல்லுபடியாகும் வீசா இன்றி இலங்கையில் தங்கியுள்ளாரா என்பதை உடனடியாக ஆராய்ந்து விசாரணை அறிக்கையை டிசம்பர் 15 ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பொறுப்பதிகாரிக்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.